திருமணமான இரண்டே நாள்.. புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, காரைக்குடி அருகே ஆவுடை பொய்கை என்ற இடத்தில் திருமணமாகி இரண்டு நாட்களே ஆன மதன்குமார் மற்றும் அவரது மனைவி நதியா ஆகிய  இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். 

அப்போது, திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று முன்னாடி சென்றுகொண்டிருந்த லாரியை முந்துவதற்கு முயன்றுள்ளது. ஆனால், அந்த கார் எதிர்பாராத விதமாக மதன்குமார் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், புது மாப்பிள்ளையான மதன்குமாரும் அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். அதன் பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளிக்கப்பட்டு இருவரும் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சென்ற அடுத்த ஐந்து நிமிடத்திலேயே மதன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், மனைவி நதியா மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். திருமணமான இரண்டு நாட்களிலேயே புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near sivakangai new married couples accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->