தேனி : விருந்துக்குச் சென்ற புதுமண தம்பதிகள்..! நீர்ச்சுழலில் சிக்கி பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் குளிக்க செல்ல வேண்டாம் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

தேனி அருகே பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி காவியா. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இவர்கள் போடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றனர். 

அங்கு சஞ்சய் என்பவருடன் ராஜாவும் காவியாவும் பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர். அங்கு நீர் வரத்து திடீரென அதிகரித்ததால் ராஜா சுழலில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சஞ்சய் மற்றும் காவியா ஆகியோர் ராஜாவைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அப்போது, நீர்வரத்தின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் மூன்று பேரும் சுழலில் சிக்கி ஆழமான பகுதிக்கு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி போலீசார் மற்றும் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோரும் விரைந்து வந்து மூன்று பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ஆனால், அதற்குள் நீரில் மூழ்கி மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்ததனால் அவர்களின் உடல்களை மட்டுமே மீட்கமுடிந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருந்துக்கு வந்த புதுமண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near theni new married couple died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->