திருநெல்வேலி : ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழந்த வாலிபர் தற்கொலை.!
near tirunelveli young man sucide for money loss in online rummy
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் மகன் சிவன்ராஜ். பட்டதாரியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து விளையாட ஆரம்பித்தார்.
அதன் மூலம் சிறு சிறு தொகையை விளையாடி வென்று வந்துள்ளார். அந்த வகையில், இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடி உள்ளார். அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையும் இழந்துள்ளார்.
அதன் பின்னர் அவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடி உள்ளார்.
அதிலும் அவர் தோல்வி அடைந்து, கடன் வாங்கி விளையாடிய பணத்தையும் இழந்துள்ளார். அதன்படி மொத்தம் ரூ.15 லட்சம் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், மனமுடைந்த சிவன்ராஜ் நேற்று தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை வாங்கி அதில் குளிர்பானம் கலந்து குடித்துள்ளார்
இதையடுத்து, மயங்கிய நிலையில் விழுந்து கிடந்த சிவன்ராஜ்ஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near tirunelveli young man sucide for money loss in online rummy