குழந்தை இல்லை என்று திட்டி தீர்த்த மாமியார்.! மனவுளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மற்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சூர்யா-ஆதிலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இதனால், ஆதிலட்சுமியின் கணவர் குடும்பத்தினர் அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆதிலட்சுமி சமையல் செய்வதற்கு தாமதபடுத்தியதாக கூறி மாமியார் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆதிலட்சுமி, வீட்டில் தனது அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதையடுத்து வெளியில் சென்ற கணவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதிலெட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ஆதிலட்சுமியின் பெற்றோர் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி திருப்பத்தூர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மேலும், அவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் படி, போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tirupathur woman sucide for without baby


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->