திருப்பூர் || மூன்று மாதங்களுக்கு ஒரு முறை.! கோவில் உண்டியலில் கிடைத்த கேரளா லாட்டரி.!
near tirupur veera ragava perumal bill money counting work
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே வீரராகவப் பெருமாள் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்கு கோவிலில் உள்ள உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், அந்த உண்டியலை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இன்று கோவிலில் உள்ள மூன்று உண்டியல்களையும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திறந்து அதிலுள்ள காணிக்கையை எண்ணும் பணியை ஆரம்பித்தனர். அப்போது அந்த உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகளும், கேரளா லாட்டரியும் இருந்தன.
இதை பார்த்த அதிகாரிகள் வியப்படைந்தனர். கோவிலில் கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் உண்டியல் பணம் எண்ணும் பணியில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
near tirupur veera ragava perumal bill money counting work