மதுபாட்டிலுக்கு ரசீது கேட்டு அதிகாரியிடம் வாக்குவாதம் போதை ஆசாமி.! வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 வேலம்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் ஒன்று உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில், திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சிவக்கொழுந்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். 

அந்த ஆய்வின் போது, அந்த மதுபானக் கடையில் பலர் மதுபாட்டில்கள் வாங்கி கொண்டிருந்தனர். அதில் ஒரு நபர், "தான் வாங்கிய மதுபாட்டிலுக்கு ரசீது வழங்க வேண்டும். எதற்காக கூடுதல் விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்கிறீர்கள் என்றுக் கேட்டுள்ளார்.

அதன் பின்னர் நீங்கள் உரிய பதில் அளிக்காவிட்டால், இந்தக் கடையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கமாட்டேன் என்று டாஸ்மாக மாவட்ட மேலாளரை மிரட்டும் வகையில் பேசினார். 

இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near tirupur yong man ask officer for receipt to liquar bottle


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->