திருவள்ளூர் : பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த காதல் ஜோடி.! பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் ஒன்றியத்தில் ஆரணி அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமகுமார். இவர் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினிதா என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். 

இருப்பினும், இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், இன்று முறைப்படி, ஐயர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

அதன் பின்னர், அவர்கள் இருவரும் ஆரணி காவல் நிலையத்திற்கு வந்து திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதையடுத்து ஆரணி காவல் நிலையத்தின் துணை தலைமை காவலர் பிரதாபன் தலைமையிலான போலீசார் காதல் ஜோடியின் பெற்றோர்களை அழைத்து அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, மணமகன் ஹேமகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து, திருமண ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tiruvallur new married couple going to police station for security


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->