திருவள்ளூர் || காலில் இடித்த இரும்பு கம்பி.! தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான இரும்பு சேனல்களை கொண்டு கட்டிடங்களை அமைத்து கொடுக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தில் தினக்கூலி அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் தினக்கூலியாக வேலை செய்து வந்தார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில், கிரேன் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு எடுத்து செல்லப்பட்ட இரும்பு கம்பி தர்மலிங்கத்தின் காலில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் தர்மலிங்கம் நிலை தடுமாறி கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தலைமை காவலர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near tiruvallur sipkat factory private company employee died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->