முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு தொடங்கியது!
NEET Entrance Exam for Masters in Medicine has started
2லட்சம் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தேர்வை கடந்த ஜூன் 23ஆம் தேதி நாடு முழுவதும் 259 நகரங்களின் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் இளநிலை நீட் தேர்வில் ஏற்பட்ட முறைகேடு சர்ச்சை தொடர்பாக தேர்வு நடைபெறும் இன்றைய நாள் இரவில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு திடீரென அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கிய நிலையில் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் என்றும் பிறகு 3.30 மணியிலிருந்து இரவு 7;30 மணி வரை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நீட் தேர்வை தமிழகத்திலிருந்து சுமார் 25,000 மேற்பட்ட மருத்துவர்கள் இந்த தேர்வு எழுதுகிறார்கள். நாடு முழுவதும் 2 லட்சம் பேருக்கு எழுதுகின்றனர்.
தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்க விருப்பம் தெரிவித்த தேர்வர்களுக்கு ஆந்திரா, கேரளம், கர்நாடகம் என பல்வேறு மாவட்டங்களில் தேர்வு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதும் மருத்துவர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
English Summary
NEET Entrance Exam for Masters in Medicine has started