சட்டப்பேரவையில் ஸ்டாலின், பாராளுமன்றத்தில் திருச்சி சிவா - அதிரடி தீர்மானம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின்  இன்று 8-ம் நாள் அமர்வில், நீட் முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். 

தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் முக ஸ்டாலின் பேசியதாவது, "நீட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம்.

மருத்துவத் துறையிலும் பல்வேறு சுகாதாரக் குறியீட்டிலும் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்வது தமிழ்நாடு. அனைத்து போட்டித் தேர்வுகளையும் ரத்து செய்து வெற்றி பெற்றவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி;

நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்த முற்பட்ட காலத்தில் இருந்தே அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டது.

2017-ம் ஆண்டில் மருத்துவ மாணவ சேர்க்கைக்கு நீட் தேர்வு வந்த பின் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனி ஆனது.

சமீப நீட் தேர்வு சம்பவங்கள் போட்டி தேர்வுகள் மீது மாணவர்கள் வைத்திருந்த நம்பிக்கையை குலைத்தது. பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள்கள் வெளியானதாக தகவல்கள் வந்தன.

முதலில் தேர்வுகளில் தவறே நடக்கவில்லை என்ற மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நடவடிக்கை எடுத்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் இன்று இந்தியாவின் ஒட்டுமொத்த குரலாக எதிரொலிக்கிறது.

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு பழைய முறையை கொண்டு வர வேண்டும் என பல மாநிலங்களில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது” என்று முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்.

இதற்கிடையே, மாநிலங்களவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு, நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு மற்றும் நீட் தேர்வால் கிராமபுற மாணவர்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக மாநிலங்களவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்து விட்டு விவாதம் நடத்தக்கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Neet PG Scam issue TN Assembly Stalin and Rajya Sabha Tiruchi Siva


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->