#BREAKING:: பல் படுங்கிய விவகாரம் - 24 காவலர்கள் பணியிட மாற்றம்.. நெல்லை எஸ்.பி அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் தமிழக முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. 

மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் வைக்கப்பட்ட விசாரணை குழுவானது கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி மற்றும் 17ஆம் தேதிகளில் விசாரணை நடத்தியது. விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் பணியாற்றி வந்த ஏஎஸ்பி பல்வீர்சிங் சிபிசிஐடி போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார். அதேபோன்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 24 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து நெல்லை மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் ஆணை பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai district sp silambarasan order to transfer 24 police


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->