சர்ச்சை பேச்சு.. சினிமா பாணி நாடகம் நிறைவு.. நெல்லை கண்ணன் அதிரடி கைது..!
nellai kannan arrest by perambalur police
காங்கிரஸ் நிர்வாகி நெல்லை கண்ணன் இஸ்லாமியர்கள் சமூகத்தினர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், பிரதமர் மோடியையும் ஒருமையில் பேசி உள்ளார். மேலும் இந்து மதம் குறித்து இழிவான பேச்சுக்களையும் பேசியிருந்தார்.
மேலும், அமித் ஷா சோலி முடிந்தவுடன், மோடியின் சோலி முடிந்துவிடும். உங்களை தான் நம்பி இருந்தோம் என சர்ச்சையாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் CAA,NRC இரண்டிலும் இந்திய இஸ்லாமியரை பாதிப்பதாகச் சரியான முறையில் விளக்கம் ஸ்டாலின் இல்லை அவர் மகன் பட்டத்து இளவரசர் உதயநிதி இருவரில் ஒருவர் விவாதம் நடத்தில் நிரூபித்தால் நான் அகதியாக வேறு நாடு செல்ல தயார். கிஷோர் சொன்னார் ஸ்டாலின் கோலம் போட்டார்.
இஸ்லாமியர்கள் மோடி கதையை முடித்துவிடுவார்கள் என்று நினைத்தேன் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்? சீக்கிரம் முடிங்கப்பா என்று நெல்லை கண்ணன் முஸ்லிம்கள் அமைத்த மேடையில் பேச அதைச் சிரித்து ரசிக்கிறார்கள்? ஒரு இஸ்லாமியர் தவறு என்று கண்டிக்கவில்லை! ஸ்டாலின் தூண்டுதலா? விசாரணை தேவை.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் இன்னொரு இந்திய பிரதமரை படுகொலை செய்ய திமுக ஆதரவாளர்கள் திட்டமா? அரசு விசாரனை தேவை என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகியது. மேலும்., இவரின் பேச்சிற்கு பலதரப்பில் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
நேற்று முதல் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்., நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இவரை கைது செய்ய காவல்துறையினர் விரைகையில் உடல்நலம் சரியில்லை என்ற சினிமா பாணியும் அரங்கேறியது. இந்நிலையில்., நெல்லை கண்ணனை பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகேயுள்ள விடுதியில் இருந்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
nellai kannan arrest by perambalur police