அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது..?
When will the teaser of Ajith Good Bad Ugly be released
விடாமுயற்சி திரைப்படத்தை அடுத்து, நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் சுமார் ரூ.270 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்துக்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டீசர் வருகிற 28-ந் தேதி வெளியாகவுள்ளதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
https://x.com/i/status/1894399476288426114
English Summary
When will the teaser of Ajith Good Bad Ugly be released