அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்..சீமான் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்யும்போது தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று குற்றம்சாட்டி இருந்தார்.மேலும்  மக்கள் தொகை கணக்குப்படி பார்த்தால் தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 எம்.பி. தொகுதிகள் குறைந்துவிடும் என்றும் கூறி இருந்தார்.

இதையடுத்து  தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க தேர்தல் கமிஷனில் பதிவு பெற்றுள்ள 45 கட்சிகளை அழைத்து அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை வருகிற மார்ச் 5-ம் தேதி தலைமைச்செயலகத்தில் கூட்டி உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார்.

இந்நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "பல போராட்டங்களை தனித்து தான் செய்து இருக்கிறோம் என்றும்  தொகுதி மறுசீரமைப்பு குறித்த கருத்தை இப்பொழுது தான் பேசுகிறார்கள் என்றும் தொகுதி மறுவரையறை தொடர்பாக 2003ம் ஆண்டே நான் அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன் என கூறினார். மேலும் இந்த விவகாரத்தில் தனித்துதான் போராடுவோம் என்றும்  கட்சிகள், ஆட்சியின் கருத்தை நாங்கள் நம்ப போவதில்லை என கூறிய சீமான்  நீண்ட காலமாக நாங்கள் நம்பி, நம்பி ஏமாந்த கூட்டம். அதனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம் என்றும்  அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்" என்று சீமான் தெரிவித்தார்.

மேலும் 1967, 1977 போல் மீண்டும் ஒரு புரட்சி தமிழகத்தில் வரும் என்று விஜய் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், "தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள்.. தம்பியினுடைய நம்பிக்கை வெற்றியடைய நான் வாழ்த்துகிறேன்.." என்று அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will not participate in the all-party meeting. Seeman's announcement!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->