மீண்டும் மிரட்ட வருகிறாள் திரௌபதி..போஸ்டருடன் இயக்குனர் மோகன் ஜி!  - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு இறுதியில், ரிச்சர்ட் ரிஷி அவர்களின் நடிப்பில், ஜிப்ரான் இசையில் திரையில் மீண்டும் மிரட்ட வருகிறாள் திரெளபதி2 ' என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

மோகன் ஜி இயக்கும் 5-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.கடந்த 2016 ம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரபேட்டை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் மோகன் ஜி. அதைத் தொடர்ந்து 2020 ம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயக்கினார். அப்போது இப்படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும், மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.பலராலும் இப்படம் வரவேற்பை பெற்றது .மேலும் கடைசியாக செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தை இயக்கினார் மோகன் ஜி. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், மோகன் ஜி இயக்கும் அவரின் 5-வது திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 2020 ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரௌபதி படத்தின் 2 -ம் பாகத்தை உருவாக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான போஸ்டருடன் இயக்குனர் மோகன் ஜி பகிர்ந்துள்ள பதிவில், 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, தர்மம் காக்க உயிரை துச்சமென துறந்த மாவீரர்களின் மறைக்கப்பட்ட வீர தீர ரத்த சரித்திரம்.என்றும் . இந்த ஆண்டு இறுதியில், ரிச்சர்ட் ரிஷி அவர்களின் நடிப்பில், ஜிப்ரான் இசையில் திரையில் மீண்டும் மிரட்ட வருகிறாள் திரெளபதி2 ' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Draupadi comes to threaten again. Director Mohan G with the poster!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->