#BREAKING || சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி நியமனம்..!!
New Chief Justice Appointed in Madras High Court
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த டி.ராஜா கடந்த மே 24ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான எஸ். வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (மே 25ம் தேதி) முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் குடியரசுத் தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
English Summary
New Chief Justice Appointed in Madras High Court