சேலம் || குடும்பத் தகராறில் புதுமணப் பெண் எடுத்த விபரீத முடிவு - காப்பாற்றச் சென்ற கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள் முருகன். இவருக்கும் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில், புதுமணத் தம்பதிகளான இருவருக்கும் இடையே நேற்றிரவு திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதுமணப்பெண் அபிராமி வீட்டில் இருந்து திடீரென வெளியே ஓடியுள்ளார். அவரைத் தொடர்ந்து கணவன் அருள் முருகனும் ஓடிய நிலையில், அபிராமி வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் திடீரென குதித்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருள் முருகன் அபிராமியைக் காப்பாற்ற கிணற்றில் குதித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் வாழப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி இருவரையும் சடலமாக மீட்டனர்.

பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றிய வாழப்பாடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new married couples died in salem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->