புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் அமல் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் அதிக மெத்தனால் கடந்த கள்ளச்சாராயத்தை குடித்து 66க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பலர் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராய சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை கள்ளச்சாராயம் தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகள் 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்க 1937ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்தது. அந்த சட்டம் திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 29ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்த மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New Prohibition Amendment Act to eliminate counterfeit liquor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->