டபுள் டமாக்கா.. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் புதிய ரயில் நிலையம்..!
new railway staion in kilambaakam
சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கபட இருந்தது. கோயம்பேட்டில் ஏற்கனவே புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமானது. இதனை கருத்தில் கொன்டு 2012 ம் ஆண்டு வண்டலூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இதற்கு அங்குள்ள மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் நிலத்தை பேருந்து நிலையத்துக்காக தேர்வு செய்தனர். இதனையடுத்து வண்டலூரில் அமைக்கப்பட இருந்த புறநகர் பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களை சிரமம் இன்றி இனிதாக மேற்கொள்வதற்காகவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தற்போது அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த புறநகர் பேருந்து நிலையத்திற்கு அருகே, புதிதாக ரயில் நிலையமும் அமைய இருக்கிறது. இதற்கு தெற்கு ரயில்வே துறையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக 450 மீட்டர் நீள உயர் நடைமேடையும் அமைக்கப்படுகிறது.
English Summary
new railway staion in kilambaakam