கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு - தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு.! NIA அசத்தல்.!
NIA announce five lakhs gift to informars for ramalingam murder case
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) போஸ்டர்களை ஒட்டி உள்ளது. மத்திய ஏஜென்சி இதுவரை 19 சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், கொலை வழக்கு தொடர்பாக முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்கானுதீன், ஷாகுல் ஹமீது, மற்றும் நஃபீல் ஹாசன் ஆகிய நபர்களை தேசிய புலனாய்வு முகமை தேடி வருகிறது.
பாமகவின் திருபுவனம் நகரச் செயலராக இருந்து வந்த கும்பகோணத்தைச் சேர்ந்த ராமலிங்கம், கடந்த 2019 அன்று வெட்டிக் கொல்லப்பட்டார். NIA தனது குற்றப்பத்திரிகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு உண்மை அறிவித்திருந்தது. தற்பொழுது இது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
English Summary
NIA announce five lakhs gift to informars for ramalingam murder case