சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.! - Seithipunal
Seithipunal


கடந்த 1ம் தேதி பெங்களூரில், ராமேஸ்வரம் கபே என்ற ஹோட்டலில், ஏற்பட்ட குண்டு வெடிப்பில், ஓட்டல் ஊழியர்கள் உட்பட, 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த குண்டு வெடிப்பை நடத்தியது, கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டத்தை சேர்ந்த முஸவீர் ஹுசைன் ஷாகிப், அப்துல் மாத்ரின் தாஹா உள்ளிட்டோர் என்பது தெரியவந்துள்ளது.

‘இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குண்டு வெடித்த இடத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவில் குற்றவாளி ஒருவர் பயன்படுத்திய தொப்பி கிடந்தது. அதன் உள்பகுதியில் தலை முடிகள் இருந்தன. இவற் கைப்பற்றி, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். தொப்பி, சென்னை சென்ட்ரல் பகுதியில் வாங்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குற்றவாளிகள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கும் சென்றுள்ளனர்.

மேலும், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள, தனியார் தங்கும் விடுதியில் தனித்தனியாக தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. குண்டு வெடிப்புக்கு முன்னரும் பின்னரும் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் தங்கி இருந்த விடுதி, சென்ற இடங்கள், வணிக வளாகம், தொப்பி வாங்கிய இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று விசாரணையில் ஈடுபட்டனர். ‘சிசிடிவி’ பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் பேசியதாவது, "தனியார் தங்கும் விடுதிகளின் பதிவுகளை ஆய்வு செய்ததில், போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அடையாள அட்டை இல்லாத எவரையும் தங்க அனுமதிக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள், சென்னையில் பயன்படுத்திய, ‘சிம் கார்டு’களை உடைத்து எரித்து விட்டனர். கடைசியாக, சென்ட்ரல் பகுதியில் பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. கேரளா அல்லது ஆந்திராவுக்கு தப்பி இருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளோம்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA officer raide in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->