ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு யூடியூபில் மூலம் ஆள் சேர்க்கப்பட்ட விவகாரம்! என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை!
NIA officials raid in Chennai
சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று சென்னை ராயப்பேட்டை பகுதியில் எனஐஏ அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
கடந்த மே மாதம் சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரிர் என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆட்கள் ஆள் சேகரிப்பில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சென்னை மத்திய குற்ற பதிவு செய்யப்படுகிறது போலீசார் கைது செய்தனர்.
மருத்துவர் ஹமீது உசேன், அவருடைய தந்தை மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரகுமான், நண்பர்கள் முகமது மாரீஸ், காதர் நவாப் ஷெரி, முகமது அலி உமாரி ஆகிய ஆறு நபர்களை பயங்கரவாத சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கும் மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த ஆவணங்கள் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் என். ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில், ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு யூடியூபில் மூலம் ஆள் சேர்க்கப்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
NIA officials raid in Chennai