அதிரும் தமிழகம்.. ரவுண்டு கட்டும் NIA.! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய புள்ளிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீட்டை குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. 

யூட்டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் விசாரணையின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

லண்டனில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய பிரமுகர் உடன் பிரத்தேக செயலை மூலம் தொடர்பில் இருந்தது என்னையே விசாரணையின் போது சிக்கியதால் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று சோதனையானது நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் இரு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆலந்துறை ஆர்ஜி நகரில் உள்ள ரஞ்சித் என்பவரின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

போன்று கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நெருக்கமாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனுக்கு சொந்தமாக திருச்சியில் உள்ள வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. 

அதேபோன்று நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான இடும்பாவனம் கார்த்திக் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தேசிய புலனாய்வு அமைப்பிடம் சிக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NIA summon to ntk duraimurugan Karthik and others


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->