ஐடிஐ, +2 போதும், உதவித்தொகையுடன் என்எல்சி-யில் பயிற்சி!  - Seithipunal
Seithipunal


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (NLC) ஐடிஐ, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட Trade-ல் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். 
எம்எல்டி பயிற்சிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை : 
பயிற்சியின் போது முதல் 12 மாதங்களுக்கு மாதம் ரூ.8,766 வழங்கப்படும்.
அடுத்த 3 மாதங்களுக்கு மாதம் ரூ.10,019 வழங்கப்படும்.

பயிற்சி காலம்: 
ஐடிஐ முடித்தவர்களுக்கு ஒரு ஆண்டு, 
எம்எல்டி பயிற்சிக்கு 15 மாதங்கள்.

வயதுவரம்பு: 1.4.2024 தேதியின்படி 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஐடிஐ, பிளஸ் 2 படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் மதிப்பெண் பட்டியல், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, முன்னாள் ராணுவவீரரின் வாரிசு சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்றிதழ், நில எடுப்பு குறித்த விவர படிவும், நோட்டரி பப்ளிக் மூலம் நிலத்திற்கான இழப்பீட்டு தொகை பெற்றவரின் சட்டப்பூர்வ வாரிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் போன்ற தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பொது மேலாளர், 
நிலத்துறை, 
என்.எல்.சி இந்தியா நிறுவனம், 
வட்டம்-20, 
நெய்வேலி - 607 803

மேலும் விவரங்கள் அறிய www.nlcindia.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் 19.9.2024 தேதி வெளியிடப்படும். பயிற்சி 30.9.2024 முதல் நடைபெறும்.

பயிற்சியின் பெயர் - Trade Apprentice :

பணியிடங்கள் - 412 துறைவாரியாக காலிப்பணியிடங்கள் விவரங்கள்: 

1. Medical Lab Technician(pathology) - 5
2. Medical Lab Technician(Radiology) - 3
3. Fitter - 62
4. Turner - 25
5. Welder - 62
6. Mechanic(Motor Vehicle) -62
7. Mechanic(Motor Diesel) -5
8. Mechanic(Tractor) - 3
9. Electrician - 87
10. Wireman - 62
11. Plumber - 3
12. Carpenter - 3
13. Stenographer - 10
14. Computer Opeator and Programming Assistant(COPA) - 20


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC Jobs Training


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->