ஊட்டிக்கு யாரும் போகாதீங்க!...அங்கு நிலைமை இது தான்!
No one should go to ooty this is the situation there
ஊட்டியில் 2 மணி நேரம் பெய்த பலத்த கனமழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கி தீவிரமடைந்துள்ள வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஊட்டி, கோத்தகிரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்படி, மதியம் ஒரு மணிக்கு தொட ங்கிய மழை பிற்பகல் 3 மணி வரை இடைவிடாமல் பெய்ததால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
ஊட்டி சவுத்வீக் பகுதியில் இருந்து வந்த மழைநீர், சேரிங்கிராஸ் பகுதியில் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். புறநகர் பகுதியில் பெய்த மழையால் விவசாய தோட்டங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே குளிர் நிலவி வரும் நிலையில், நேற்று பெய்த மழையால் கடும் குளிர் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
English Summary
No one should go to ooty this is the situation there