எரியாத ஐ-மாஸ் விளக்கு..உடனடி நடவடிக்கையில் இறங்கிய கென்னடி எம் எல் ஏ!
Non-burning I-Mass lamp. Kennedy MLA takes immediate action
புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் அருகில் ஐ-மாஸ் விளக்கு எரிய வைக்க மின் துறை உதவி பொறியாளர் முரளிதரன் அவர்களை அனிபால் கென்னடி எம் எல் ஏ அவர்கள் நேரில் சென்று சந்தித்து பேசினார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதி உட்பட்ட வம்பாகீரப்பாளையம் அங்காளம்மன் கோவில் கிழக்கு பகுதியில் இருக்கும் ஐ-மாஸ் விளக்கு எரிய வில்லை, அங்கு இருள் சூழ்ந்த பகுதியில் மீன் பிடி தொழில் செய்ய சிரமமாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை நேர்ந்திட உள்ளதாக பகுதி குடியிருப்பு மக்கள் உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களிடம் தெரிய படுத்தினர்.
உடனடியாக இது குறித்து மின்துறை பிரிவு முரளிதரன் உதவி பொறியாளர் அவர்களை சட்ட மன்ற உறுப்பினர் நேரில் அலுவலகம் சென்று சந்தித்து பேசினார். சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்று சீர் செய்து கொடுப்பதாக மின் துறையினர் உறுதி அளித்தார். உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் ராகேஷ், கழக சகோதரர்கள் பர்தாவச்சலம், கோவிந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Non-burning I-Mass lamp. Kennedy MLA takes immediate action