இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுக்கச் சென்ற வடமாநில வாலிபர் - திருப்பத்தூரில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் நேற்று வேலூர் நோக்கி சென்ற பேருந்து ஒன்று நின்றது. அப்போது பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கிக் கொண்டு இருந்தனர். அவர்களுடன் இளம்பெண் ஒருவரும் இறங்கினார். 

இதைப்பார்த்த வாலிபர் ஒருவர் ஓடிச்சென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் சத்தம் போட்டதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப் புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north state youth tried hug and kiss to woman in tirupathur bus stand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->