விலகும் வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் இரு தினங்கள் கனமழை எச்சரிக்கை!
Northeast monsoon IMD Rain report 25 dec 2025
பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, வரும் 28-ந்தேதி தமிழகம், புதுவை, காரைக்காலில் வரை மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 30-ந்தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு (மஞ்சள் எச்சரிக்கை) வாய்ப்பு உள்ளது.
வரும் 31-ந்தேதி கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வடகிழக்கு பருவமழை அடுத்த 2 தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலக வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
Northeast monsoon IMD Rain report 25 dec 2025