என்னை  மன்னிச்சிடுங்க...யூடியூபர் இர்பான்! அலுவலகத்திற்கு பறந்தது நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


பிரபல யூடியூபர் இர்பான், இவரை யூடியூபில் ஏகப்பட்ட பேர் பின்தொடர்கின்றனர். இவர் பல்வேறு உணவு வகைகள் தொடர்பாக   போடும் பதிவு மிகவும் பிரபலம்.  இவருக்கு  ஆலியா என்ற பெண்ணுடன் கடந்த வருடம் திருமணம் நடத்தது. 

இந்நிலையில்,  இர்பானின் மனைவி ஆலியா கருவுற்றுள்ளார். மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினத்தை  யூடியூபில் வெளியிட்டதால் சர்ச்சையையில் சிக்கியுள்ளார் இர்பான். வயிறில் வளரும் சிசுவின் பாலினத்தை அறிய துபாய் சென்று இர்பான் அறிந்து கொண்டார். 

தற்போது வயிறில் வளரும் சிசுவின் பாலினம் குறித்து அறிவிப்பதற்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் உள்ளது என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதுதொடர்பாக, சுகாதாரத்துறை இர்பானிடம்  விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை இர்பானிடம் அமைத்து இருக்கிறது.  இந்த விவகாரத்தில், தற்போது இர்பான் மன்னிப்பு கோரி உள்ளார். மேலும் தன்னை தொடர்பு கொண்டு விசாரணைநடத்திய அதிகாரிகளிடம், தான் செய்தது தவறுதான் என்றும், அதற்க்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் வெளியிடவும்  தயாராக இருக்கிறேன் என்றும் அவர்களிடம் தெரிவித்துள்ளார். 

ஆனால், இர்பான் மீதான நடவடிக்கை தொடரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, நுங்கம் பாக்கத்தில் உள்ள இர்பான் வெற்றிக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று நேரில் சென்று  விசாரணை நடத்தினர். சிசுவின் பாலினத்தை அறிவித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு  ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது  சுகாதாரத்துறை அதிகார்கில் முறைப்படி  அவரிடம் நோட்டீஸ் நேரடியாக வழங்கியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Notice send to irfan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->