"பேச்சு மட்டும் தான், செயல் எங்கே? கலாஷேத்ரா கல்லூரி விவகாரம்.! நாதக சீமான் அட்டாக்.!
ntk organiser seeman condemns govt action against kala shethra
சென்னை அடையாறில் இயங்கி வரும் பாரம்பரியமிக்க கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவியல் கொடுத்த புகாரை தொடர்ந்து கல்லூரி வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி வரை மூடப்பட்டிருக்கிறது.
சென்னை அடையாறில் இயங்கி வரும் கலாஷேத்ரா நடனம் மற்றும் கலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் அங்கு போகையிலும் மாணவியிடம் பாலியல் ரீதியாக தொடர் தொல்லை கொடுத்து வந்ததையடுத்து இந்தக் கொடுமைக்கு எதிராக தொடர் குரல் எழுப்பிய மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இது தொடர்பாக அறிக்கையளிக்குமாறு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பாக புகாரளித்திருந்த அந்த மாணவி ஏதோ தவறுதலாக புகார் அளித்து விட்டதாகவும் ஆசிரியரின் மீது இந்த புகாரளிக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருந்தார். இதற்கு முன் தான் கொடுத்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து புதிய புகார் ஒன்றையும் காவல் நிலையத்தில் அளித்திருந்தார். இந்த மாணவியின் மீது காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "தமிழக அரசு அன்றே விரைவாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர்களை வெளியே வந்து போராட விட்டு இருக்க கூடாது. எல்லாவற்றிற்குமே குழு அமைப்பதால் எந்தவித பயனும் இல்லை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
English Summary
ntk organiser seeman condemns govt action against kala shethra