காஞ்சிபுரம் : பேருந்து நிலையத்தில் உயிருக்கு போராடிய டிரைவர்.! நொடியும் யோசிக்காமல் காப்பாற்றிய செவிலியர்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக செவிலியராக பணிபுரிந்து வருபவர் விஜய நிர்மலா சிவா. இவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு சொந்த ஊரான கம்மவார்பாளையம் செல்வதற்காக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். 

அப்போது, முதியவர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் கீழே விழுந்து கிடந்த முதியவரை சுற்றி கூடி நின்றுள்ளனர். இதை பார்த்த செவிலியர் விஜய நிர்மலா சிவா, உடனே சென்று முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். சிறிது நேரத்திலேயே அந்த முதியவருக்கு சுயநினைவு திரும்பியது. 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஆம்புலன்சை வரவழைத்து அதன் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு  மருத்துவர்களுக்கு நடந்த விவரங்களை விஜய நிர்மலா சிவா தெரிவித்தார். 

பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற அரசு செவிலியர் ஒருவர், கீழே விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை எந்த விதமான மருத்துவ உபகரணங்களும் இல்லாமல் சிகிச்சை அளித்து முதியவரை காப்பாற்றிய செவிலியருக்கு அனைவரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர். 

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்ததில், முதியவரின் பெயர் ராஜேந்திரன் என்றும், அவர் போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணிபுரிந்து கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றது, தற்போது பேருந்து நிலையத்தின் அருகே உள்ள நான்கு கடைகளை நடத்தி வருவதும் தெரியவந்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nurse save drivar life in kanchipuram bus stand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->