இனி கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை - முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


வருகின்ற 2026-ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இனி வரும் காலங்களில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து தோழர்களும் எழுச்சியுடன் ஒன்று சேர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் நிலைநிறுத்துவார்கள். 

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. அதற்குள் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழலாம். மக்கள் மத்தியில், தி.மு.க. அரசு மீது கடுமையான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

அதனால், அடுத்த தேர்தலில் மக்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை. தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்தார். பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

o panneer selvam speech about no chance of coalition govt in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->