ஒடிசா ரயில் விபத்து! மொத்தம் இதுவரை 1,200 பேர்.., தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை!
Odisha Train Accident Coromandel Express Bangalore Express
ஒடிசா ரயில் விபத்தில் 1,200 பேர் எந்தவித பாதிப்புமின்றி உயிர் தப்பி உள்ளதாக, தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
எஸ்வந்த்பூரில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்பட்ட ரயில் நேற்று கோரமண்டல் ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பெட்டிகள் கவிழ்ந்தன.
தடம் புரண்ட கோரமண்டல் ரயில் பெட்டி மீது மோதிய பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயில் மோதியது. இப்படியாக 3 ரயில்கள் மோதிய இந்த விபத்தில் இதுவரை 233 பேர் பலியாகியுள்ளதாக தக்வல்கள்கள் கிடைத்துள்ளன.
இந்த விபத்தில், பெங்களூரு-ஹவுரா அதி விரைவு ரயிலில் இருந்த 1,200 பயணிகளுக்கு பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சேதம் அடைந்த பெட்டிகளை தவிர்த்து மீதம் உள்ள பெட்டிகளுடன் ஹவுரா ரயில் புறப்பட்டு உள்ளதாக தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஒடிசா, பாலசோரில் 3 ரயில்கள் விபத்து தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளோம், சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
English Summary
Odisha Train Accident Coromandel Express Bangalore Express