தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழப்பு.. கன்னியாகுமரி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தனக்கு தானே கல்லறை கட்டிய மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சூழால் கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் ரோசி (70). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்து வந்துள்ளார். அந்த பகுதியில் கிடைக்கும் வேலைகளையும் அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கும் சென்று வாழ்வை நடத்தி வந்தார். அவரை உறவினர்  விஜயன் என்பவர் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளார்.

இந்நிலையில், அவரின் வீட்டில் இருந்து  துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கதினர் விஜயனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் காவல்துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் அவர் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் பார்த்த போது அவர் சடலமாக கிடந்தார்.

அவரின் சடலத்தை மீட்டகாவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் 2016-ம் ஆண்டு தனக்கு சொந்தமான இடத்தில் கல்லறை கட்டி பால் காய்ச்சியுள்ளார். மேலும், கல்லறை அருகிலேயே 2 அறைகள் கட்டி ரோசி வசித்து வந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Lady Death in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->