சிவகங்கையில் இறந்த நாய்க்கு சிலை வைத்து வழிபாடு செய்த முதியவர்.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த 82 வயது முதியவர் முத்து. இவர் டாம் என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இது கடந்த 2021 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளது.

இதனால் மிகுந்த வேதனையில் இருந்த முதியவர் தனது நாய் டாமின் நினைவாக மானாமதுரையில் சிலை ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு மாலை, ஆடை அணிவித்து வழிபாடு செய்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

இதுகுறித்து முதியவர் முத்து கூறுகையில் என் பிள்ளைகளை விட நான் நாயின் மீது அதிக பாசம் கொண்டேன். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் என்னுடன் இருந்தது. என் தாத்தா, பாட்டி, தந்தை என அனைவரும் நாய்க் பிரியர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது நாய்க்கு சிலை செய்து வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old man death dog memorial Statue and pray UB


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->