மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி.. ஈரோடு அருகே நிகழ்ந்த சோகம்..!
old man Death near Erode
மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், ஆட்டையாம்பாளையம், கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்கு முத்துசாமியின் வீட்டில் இருந்து தற்காலிக மின் இணைப்பு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
சம்பவதன்று, முத்துசாமி குளித்து கொண்டிருந்த போது தொங்கி கொண்டிருந்த போது அருகில் தொங்கிய மின்வயரை அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.