கரூர் : அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட முதியவர் - காரணம் என்ன?
old man sucide in karoor medical college hospital
கரூர் : அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட முதியவர் - காரணம் என்ன?
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அருகே வடக்கு புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். காய்ச்சல் குணமாகாததால் அவர் தனது மனைவியுடன் கடந்த 13-ந்தேதி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பண்ணசாமிக்கு சிறுநீரக தொற்று இருப்பதாக தெரிவித்து, அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து அவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கருப்பண்ணசாமி நேற்று அதிகாலை பிளேடால், தனது கழுத்தை அறுத்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி ஓடிவந்த மருத்துவர்கள் கருப்பண்ணசாமியை பரிசோதனை செய்து போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கருப்பண்ணசாமி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்தச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
English Summary
old man sucide in karoor medical college hospital