குடிபோதையில் 60 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்த முதியவர்... 3 நாட்களுக்கு பிறகு மீட்பு..!! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் குடிபோதையில் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மூன்று நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் சிலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (65). இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று அருகில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். இதையடுத்து மது அருந்தி இருந்த உதயசூரியன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, சோளத் தோட்டத்தில் உள்ள பாழடைந்த 60 அடி ஆழக்கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து திருவிழாவிற்கு சென்ற முதியவர் வீட்டிற்கு வரவில்லை என்று குடும்பத்தினர் கடந்த மூன்று நாட்களாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்து உரிமையாளர் அப்பகுதி அருகே சென்ற போது கிணற்றுக்குள் உதயசூரியன் தவறி விழுந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாழடைந்த கிணற்றிலிருந்த படிக்கட்டில் அமர்ந்துகொண்டு பரிதவித்த முதியவரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man who fell into 60 feet deep well while drunk rescued alive after 3 days in theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->