கோவையில் பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்.!! காலில் விழுந்து உணர்ச்சியை வெளிப்படுத்திய நபர்.!! - Seithipunal
Seithipunal


கோவையில் பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்.!! காலில் விழுந்து உணர்ச்சியை வெளிப்படுத்திய நபர்.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று பறையிசை பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் ஏராளமான பறையிசை குழுவினர் கலந்து கொண்டனர். 

இந்தக் குழுவினர் பறை இசைத்து ஆடி பாடி வந்தனர். அவர்களை இனியன் என்ற ஒன்றரை வயது சிறுவன் ஆர்வத்துடன் பார்த்துதான். இதைக் கவனித்த பறை இசை குழுவினர் சிறுவனுக்கு,சிறிய பறை ஒன்றை வழங்கினர். 

இதனை கையில் வாங்கிய அந்த சிறுவனும் பறை இசைத்தபடி பேரணியில் நடக்க தொடங்கினார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். அப்போது, ஒரு நபர் சிறுவனுக்கு அருகில் வந்து காலில் விழுந்து கண்ணீர் மல்க தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த நெகிழ்ச்சி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one and half year old boy play parai in coimbatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->