அண்ணாமலையை போல் சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி - அடுத்த நொடியில் மயங்கி விழுந்த சம்பவம்.!
one more bjp excutive sattai slape in covai for anna university harassment issue
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று கோயம்புத்தூரில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சூலூர் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்த கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. முன்னாள் பொதுச்செயலாளர் ஜெய்ஹிந்த் முருகேஷ் என்பவரும் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து, தனது வீட்டின் முன்பு சாட்டையால் அடித்து கொண்டார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் அவரது வீட்டின் முன்பு திரண்டு விட்டனர். மொத்தம் 9 முறை தன்னைத் தானே சாட்டையால் அடித்து கொண்டார். அப்போது, அங்கு திரண்டு இருந்த பா.ஜ.கவினர் கோஷங்களை எழுப்பினர். இந்த நிலையில், ஜெயஹிந்த் முருகேஷுக்கு சாட்டையால் அடித்து கொண்டதால் உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டது.
இருப்பினும் அவர் வலியை பொறுத்து கொண்டு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரத்திலேயே, அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
one more bjp excutive sattai slape in covai for anna university harassment issue