சிபிஐ அதிரடி! நீட் தேர்வு முறைகேடு! சிக்கிய பெரும் புள்ளியிடம் விசாரணை! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் 67 மாணவர்கள் 720க்கும் 720 எடுத்தது சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமில்லாமல் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி 7 பேர் முழு மதிப்பெண் பெற்ற சம்பவம் வினாத்தாள் கசிவை உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறைகேடு தொடர்பாக பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் லத்துரை சேர்ந்த நஞ்சுநேசப்பா என்பவர் நீட் முறை கேட்டு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே 8 பேரை கைது செய்து விசாரணை செய்த ஒரு நிலையில் மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீட் முறை கேட்டு தொடர்பாக சிபிஐ 6 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. வினாத்தாள் கசிவு தொடர்பாக குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் ஆள் மாறட்டும் முறைகேடு போன்ற மோசடி தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One more person arrested in connection with NEET examination malpractice


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->