மீண்டும் ஒரு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை.! பதறவைக்கு கடிதம்.!  - Seithipunal
Seithipunal


சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

அந்த பள்ளி மாணவி எழுதியுள்ள அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"இதுக்குமேல முடியாது, மனசு ரொம்ப வலிக்குது, செக்ஸ்வுவல் ஹரஸ்மெண்ட் முடியல., 

எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை., என்னால நிம்மதியா தூங்க முடியல., அந்த கனவு வந்து டார்ச்சர் பண்ணுது., படிக்க முடியல., பாதுகாப்பே இல்லை., இந்த கேடுகெட்ட சமூகத்தில் என்னோட கனவு எல்லாம் போயிடுச்சி., எவ்ளோ வழி எனக்குள். 

அனைத்து பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளுக்கும், மகன்களுக்கும் சொல்லி வளருங்கள். பெண்களுக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும் என்று.

எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். 

உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்ப கூடாது.

அம்மா போயிட்டு வரேன் இன்னொரு உலகத்துக்கு., 

பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையில் தான்.

பள்ளி பாதுகாப்பானதாக இல்லை. உறவினர்களும், மற்றவர்களும் பாதுகாப்பானது இல்லை.

எனக்கு நியாயம் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த கடிதம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவிவருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ONE MORE SCHOOL GIRL SUICIDE IN CHENNAI FOR SEXUAL HARRESMENT


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->