தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் சோதனை.. டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் அருகே மேம்பள்ளம் பகுதியில் நடைபெறும் ஓஎன்ஜிசி பணிகளை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 45 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தன.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேம்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் கச்சா எண்ணெய் கிடைக்காததால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை நிறுத்தி விட்டது.

இந்த நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பகுதியில் மீண்டும் ஓஎன்ஜிசி நிறுவனம் மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிடைக்கிறதா என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேம்பள்ளம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஓஎன்ஜிசி பணியாளர்கள் ஹைட்ரோ கார்பன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரோ கார்பன் பரிசோதனை செய்யும் பணிகளை மாவட்டம் நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ONGC again testing hydrocarbons in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->