இணையவழி சூதாட்டம்!...குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்! - முருகானந்தம்! - Seithipunal
Seithipunal


இணையவழி சூதாட்டம், விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம்  தெரிவித்துள்ளார். 


சென்னை சாந்தோமில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற இந்த பிரசாரத்தை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

பின்னர் தொடர்ந்து பேசிய அவர், இணையவழி சூதாட்டம், இணையவழி விளையாட்டு சமூகத்தில் தீய தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும், கொரோனா காலகட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுகள் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் பரவியது என்றும், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் இதனை ஒழுங்குபடுத்தி வருவதாக தெரிவித்தார். 

மேலும், திமுக அரசு இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை தடுக்க சட்டம் இயற்றியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இணையவழி சூதாட்டம் விளையாட்டு தொடர்பாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online Gambling Parents must supervise children Muruganantham


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->