இனி சுடுகாட்டிற்கும் ஆன்லைன் புக்கிங் கட்டாயம்..!! சென்னை மாநகராட்சி அதிரடி..!!
Online registration is mandatory in electric cemeteries
சென்னை போன்ற பெரு நகரங்களில் மக்கள் தொகை பெருகிவிட்டதன் காரணமாக இறந்தவர்கள் அடக்கம் செய்ய போதுமான இட வசதி இல்லாததால் மின்சார சுடுகாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது போன்ற மின்சார சுடுகாடுகளில் பிணங்களை எரிக்க இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
குற்ற செயல்களை தவிர்ப்பதற்காக மாநகராட்சி இது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் சில நேரங்களில் 30 ஆயிரம் ரூபாய் வரை மயானங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் லஞ்சமாக கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சென்னை மாநகராட்சி சார்பாக இலவச சேவை வழங்கி வரும் நிலையில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இது போன்ற பணம் வாங்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் மின்சார சுடுகாடுகளில் உடலை எரிக்க முடியாத நிலை உண்டாகியுள்ளது.
இதற்கிடையே இது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதற்காக சென்னையில் உள்ள மயான பணிகளை டிஜிட்டல் மாயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மின்சார சுடுகாடுகளில் உடலை எரிக்க இனி ஆன்லைன் முன்பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட உள்ளது.
ஆன்லைனில் சுடுகாட்டில் எரிக்கப்பட உள்ள நபரின் பெயர், அவரின் உறவினரின் பெயர், முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் கொடுத்து ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மின்சார சுடுகாடு சேவை இலவசமாக பொதுமக்கள் அனைவரும் பெற முடியும். மேலும் முறையற்ற மரணங்கள் மற்றும் லஞ்சங்கள் போன்றவற்றை கண்காணிக்க ஆன்லைன் பதிவு முறை உதவிகரமாக இருக்கும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
Online registration is mandatory in electric cemeteries