சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு'..சீமான் பேட்டி!
Only when the sun sets will the Tamil community be relieved Interview with Seeman
தேர்தலில் பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டும் என்றும் காந்தி படத்தை காட்டி ஓட்டு கேட்க கூடாது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு கிடைக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் மாவட்ட செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-"தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டியுள்ளது என கூறினார்.
மேலும் பேசிய சீமான் பெரியார் ஒழிக என்பது எங்கள் கோட்பாடு கிடையாது என்றும் பெரியாரை எதிர்த்து பேசிதான் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா வெளியே வந்தார் என்றும் அதன் பிறகு பெரியாரைப் பற்றி கருணாநிதி விமர்சித்து பேசியதை விட நாங்கள் ஒரு துளி கூட பேசவில்லை என தெரிவித்தார்.
மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது, மக்களின் தன்னெழுச்சியான பேரெதிர்ப்புக்கும், புரட்சிகர போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என கூறிய சீமான் இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்தார்,
மேலும் தேர்தலில் பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டும் என்றும் காந்தி படத்தை காட்டி ஓட்டு கேட்க கூடாது என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு கிடைக்கும் என்று இவ்வாறு சீமான் கூறினார்.
English Summary
Only when the sun sets will the Tamil community be relieved Interview with Seeman