ஒப்பிலியப்பன் கோவில் தேரோட்டம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம் !
Oppiliappan Temple Car Race A large number of devotees have darshan
தென்னக திருப்பதி' என போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் பங்குனி பிரமோற்சவ விழா தேரோட்டம் வெகு விமரிசியாக நடைபெற்றது.
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், 'தென்னக திருப்பதி' என போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பிரமோற்சவம் 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் பொன்னப்பர்- பூமிதேவி தாயாருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஏராள மான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து பொன்னப்பர்- பூமிதேவியை தரிசனம் செய்தனர்.
மேலும்,தேருக்கு முன்பாக ரதவீதிகளில் அம்மன் வேடம் அணிந்த பெண்கள் நடனம், நாட்டிய குதிரையின் நடனம், செண்டை மேளம் முழங்க சென்றது. தேர் 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலைக்கு வந்ததும், கோவில் புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.விழாவின், நிறைவு நாளான 28-ந்தேதி காலை மூலவர் சன்னதியில் அன்னப்பெரும்படையலும், மாலை புஷ்பயாகமும் நடைபெற உள்ளது.
English Summary
Oppiliappan Temple Car Race A large number of devotees have darshan