ஓபிஎஸ் விவகாரம் | இதெல்லாம் நல்லவா இருக்கு! பத்திரிகையாளர்களை கடிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!
OPS Issue ADMK GS EPS mild angry press meet
ஓபிஎஸ் விவகாரத்தில் பத்திரிகை, ஊடகங்கள் கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுருத்தியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி எழுப்பினர்.
அதற்க்கு அளித்த எடப்பாடி பழனிச்சாமி, "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சின்னம் எங்கள் பக்கம் வந்ததாக நீங்கள் தான் செய்திகளை வெளியிட்டீர்கள்.
நீதிமன்ற தீர்ப்பும் எங்களுக்கு ஆதரவாக தான் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளீர்கள். தேர்தல் ஆணையமும் தெளிவான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆனால், அவர்கள் (ஓபிஎஸ் தரப்பு) நடத்தக்கூடிய அந்த மாநாட்டை அண்ணா திமுகவின் மாநாடு என்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடுகிறார்கள்.
இந்த பக்கம் அதிமுகவின் கொடி, அந்த பக்கம் இரட்டை இலை சின்னம் என்ன விளம்பரம் இது. இதை எப்படி நீங்கள் வெளியிடுகிறீர்கள்.
பத்திரிக்கையாளர்கள் கொஞ்சம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். இதே நிலைமை திமுகவில் நடைபெற்று, இப்படியான ஒரு விளம்பரத்தை நீங்கள் போட்டு விடுவீர்களா?
இந்த ஜனநாயக நாட்டில் பத்திரிகைகளின் பங்களிப்பு அதிகம். எனவே இது போன்ற விளம்பரங்களை நீங்கள் பிரசுரிக்க கூடாது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
OPS Issue ADMK GS EPS mild angry press meet