கொரோனா தொற்று அதிகரிப்பால் ஸ்ரீபெரம்புதூர் இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையம் மூட உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கொரோனா தொற்று அதிகரிப்பால் ஸ்ரீபெரம்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் மொத்தம் 235 மாணவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில், இதுவரை 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவர்கள் வீடு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து துணைப்பதிவாளர் தெரிவித்ததாவது,

கொரோனா தொற்று பரவலால் ஊழியர்கள் மாணவர்கள் பாதுகாப்பு கருதி மறு அறிவிப்பு வரும் வரை பயிற்சி நிறுவனம் மூடப்படும். மேலும் விடுதியில் தங்கி உள்ள மாணவர்கள் விடுதியை உடனே காலி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் 13ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும்வரை, ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Order to close Sriperumbudur Youth Development Training Center due to increase in corona virus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->