6 பேர் பலியான ஏற்காடு விபத்து.. வெளியான திடுக்கிடும் தகவல்.!!
Over speed is caused yercaud Bus accident
சேலம் மாவட்டம் ஏற்காடு பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பேருந்து அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக தகவல்
ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. எனினும் பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது.
English Summary
Over speed is caused yercaud Bus accident